7.இடையியல்

சொல்லும் பொருளும்

அதனை உணர்த்தும் ஆற்றல்

392பொருட்குத்திரி பில்லை உணர்த்த வல்லின்.
 

`உறுகால்' (நற்-37) என்புழி உறுவென்னுஞ் சொற்குப் பொருளாகிய மிகுதி யென்பதன் பொருளும் அறியாத மடவோனாயின், அவ்வாறு ஒருபொருட்கிளவி கொணர்ந்துணர்த்துலுறாது கடுங்காலது வலிகண்டாய். ஈண்டு உறுவென்பதற்குப் பொருளென்று தொடர்மொழி கூறியானும், கடுங்காலுள்வழிக் காட்டியானும் , அம்மாணாக்க னுணரும் வாயிலறிந்து உணர்த்தல் வல்லனாயின் அப்பொரு டிரிபுபடாமல் அவனுணரும் என்றவாறு அவற்றானு முணர்த லாற்றாதானை உணர்த்துமா றென்னை யெனின்:- அதற்கன்றே வருஞ்சூத்திர மெழுந்த தென்பது .

(96)