அன்ன பிறவுங் கிளந்தவல்ல பன்முறையானும் பரந்தன வரூஉம் உரிச்சொல் லெல்லாம் என்பது, சொல்லப் பட்டனவேயன்றி அவைபோல்வன பிறவும் பலவாற்றானும் பரந்துவரு முரிச்சொல்லெல்லாம் என்றவாறு. பொருட்குறை கூட்டவியன்ற மருங்கினினைத்தென வறியும் வரம்பு தமக்கின்மையின் என்பது, பொருளோடு புணர்த்துணர்த்த இசை குறிப்புப் பண்புபற்றித் தாமியன்ற நிலத்து இத்துணையென வரையறுத்துணருமெல்லை தமக்கின்மையான் எஞ்சாமைக் கிளத்தலரிதாகலின் என்றவாறு. வழிநனி சடைப்பிடித்தோம் படையாணையிற் கிளந்தவற்றியலாற் பாங்குறவுணர்தல் என்பது, `இசையினுங் குறிப்பினும் பண்பினுந் தோன்றிப் பெயரினும் வினையினு மெய்தடுமாறி' (சொல்-267) எனவும், `முன்னும் பின்னும் வருபவைநாடி' எனவுங் கூறிய நெறியைச் சோராமற் கடைப்பிடித்து ` எச்சொல்லாயினும் பொருள் வேறு கிளத்தல்' (சொல்-267) எனவும், `ஒத்த மொழியாற் புணர்த்தன ருணர்த்தல் தத்த மரபிற் றோன்றுமன் பொருளே' (சொல்-376) எனவும், என்னாற் றரப்பட்ட பாதுகாவ லாணையிற் கிளந்த வற்றியல் பொடுமரீ இயவற்றை முறைப்பட வுணர்க என்றவாறு. குறிப்புப்பொருண்மை பலவகைத்தாகலானும், பெயரினும் வினையினு மெய்தடுமாறியுந் தடுமாறாதும், ஒருசொற் பலபொருட் குரித்தாயும் வருதலானும், ஈறுபற்றித் தொகுத்துணர்த்தற்கு அன்னவீறுடைய வன்மையானும் ` பன்முறையானும் பரந்தன வரூஉம்' என்றார். பொருளைச் சொல் இன்றியமையாமையின், அதனைக்குறையென்றார்; ஒருவன் வினையும் பயனும் இன்றியமையாமின், `வினைக்குறி தீர்ந்தாரிற் றீர்ந்தன் றுலகு' (குறள்-912), `பயக்குறை யில்லைத் தாம் வாழு நாளே' (புறம்-177) என்றாற் போல, பொருட்குறை கூட்ட வரம்புதமக்கின்மை யினென இயையும். இருமையென்பது கருமையும் பெருமையு மாகிய பண்புணர்த்தும். சேணென்பது சேய்மையாகிய குறிப்புணர்த்தும்.தொன்மை யென்பது பழமையாகிய குறிப்புணர்த்தும். இவையெல்லாம் அன்னபிறவுங் கிளந்த வல்ல வென்பதனாற் கொள்க. பிறவுமன்ன. உரியியல் முற்றிற்று (100) |