பொது வெழுத்தானியன்றனவே யன்றி , வடவெழுத்தானியன்ற வடசொற் சிதைந்து வரினும் , பொருத்தமுடையன, செய்யுளிடத்து வரையார்: எ - று. எ - டு : `அரமிய வியலகத் தியம்பும்' (அகம் - 424) எனவும் , `தசநான் கெய்திய பணைமரு ணோன்றாள்' (நெடுநல் - 115) எனவும் வரும். சிதைந்தன வரினுமெனப் பொதுப்படக் கூறியவதனான் , ஆனை, வட்டம் , நவீடம் , கண்ணன் எனப் பாகதமாய்ச் சிதைந்து வருவனவுங் கொள்க. இச்சூத்திரத்தானும் அவை தமிழ்ச்சொலன்மையறிக. (6) |