இசைநிறையும் அசைநிலையும் பொருள் வேறு பாட்டோடு புணர்வதுமென ஒரு சொல் லடுக்கு அம் மூன்று வகைப்படும்; எ - று. எ - டு :` ஏ ஏ ஏ ஏ யம்பன் மொழிந்தனள்' என்றது இசைநிறை. மற்றோ மற்றோ; அன்றே அன்றே என்பன அசைநிலை . பாம்பு பாம்பு, அவனவன் ; வைதேன் வைதேன் ; உண்டு உண்டு ; போம் போம் என்பன முறையானே விரைவுந் துணிவும் உடம்பாடும் ஒரு தொழில் பலகானிகழ்தலுமாகிய பொருள்வேறுபா டுணர்த்தலிற் பொருளொடு புணர்த்தல் . பொருள் வேறுபாடு பிறவுமுளவேல் வழக்கு நோக்கிக் கண்டுகொள்க. அடுக்கு ஒரு சொல்லது விகாரமெனப்படும் . இரண்டு சொல்லாயின் இருபொருளுணர்த்துவதல்லது இப்பொருள் வேறுபாடுணர்த்தாமையினென்பது. (15) |