வேற்றுமைத் தொகை அவ்வேற்றுமை யுருபு தொடர்பொரு ளுணர்த்தியாங் குணர்த்தும்; எ - று. எனவே, சாத்தனொடு வந்தான் என்னும் பொருட்கட் சாத்தன் வந்தன் எனவும் சாத்தற்குக் கொடுத்தான் என்னும் பொருட்கட் சாத்தன் கொடுத்தான் எனவும் உருபு தொடர்புப் பொருளுணர்த்தும் ஆற்றலில்லன தொகா, அவ்வாற்றலுடையனவே தொகுவனவென்றவாறாம். இரண்டாம் வேற்றுமைத்தொகை முதலாக வேற்றுமைத்தொகை அறு வகைப்படும். நிலங்கடந்தான், குழைக்காது எனவும்; தாய் மூவர், பொற்குடம் எனவும்; கருப்பு வேலி, கடிசூத்திரப்பொன் எனவும்; வரை பாய்தல் , கருவூர்க் கிழக்கு எனவும் சாத்தன் புத்தகம், கொற்றனுணர்வு எனவும்; மன்றப்பெண்ணை, மாரியாமா எனவும் வரும் இவை முறையானே நிலத்தைக் கடந்தான் ; குழையை யுடைய காது; தாயொடு மூவர்; பொன்னானியன்ற குடம் ; கரும்பிற்கு வேலி; கடிசூத்திரத்திற்குப் பொன்; வரையினின்றும் பாய்தல்; கருவூரின் கிழக்கு; சாத்தனது புத்தகம் ; கொற்றன துணர்வு; மன்றத்தின்கணிற்கும் பெண்ணை; மாரிக்கணுள தாமா என்னும் உருபுதொடர்ப் பொருளை இனிது விளக்கியவாறு கண்டு கொள்க, பிறவுமன்ன. (17) |