9.எச்சவியல்

தொகைச்சொல் வகைதொகை யாவன

அசைநிலை அடுக்கு

425கண்டீர் என்றா கொண்டீர் என்றா
சென்றது என்றா போயிற் றென்றா
அன்றி அனைத்தும் வினாவொடு சிவணி
நின்றவழி அசைக்குங் கிளவி என்ப.
 

கண்டீரெனவும் , கொண்டீரெனவும் , சென்றதெனவும் போயிற்றெனவும் வரும் வினைச்சொன் னான்கும் ; வினாவொடு பொருந்தி நின்றவழி அசைநிலையடுக்காம்; எ - று.

கட்டுரையகத்து ஒருவன் ஒன்று சொல்லியவழி அதற்குடம்படாதான் கண்டீரே கண்டீரே என்னும் ; ஈண்டு வினைச்சொற் பொருண்மையும் வினாப்பொருண்மையு மின்மையால் . அசைநிலையாயினவாறு கண்டுகொள்க. வரையாது கூறினமையால் , கண்டீரே எனச் சிறுபான்மை அடுக்காது வருதலுங் கொள்க. ஏனையவும் ஏற்றவழி அடுக்கியும் அடுக்காதும் அசைநிலையாம். அவை இக்காலத்தரிய ; வந்தழிக் கண்டுகொள்க.

(29)