எச்சச் சொற்களின் வகை
பெயரெச்சம்
பெயரெச்சம் பெயரொடு முடியும்; எ - று.
எ - டு : உண்ணுஞ்சாத்தன்; உண்டசாத்தன் என வரும்.
`அவ்வறு பொருட்குமோ ரன்ன வுரிமைய' (சொல் - 234) என்றதனாற் பெயரெச்சம் பொருள்படுமுறைமை கூறினார். முடிபு எச்சவியலுட் பெறப்படுமென வினையியலுட் கூறியவாறு கடைப்பிடிக்க.