9.எச்சவியல்

எச்சச் சொற்களின் வகை

ஒழியிசை யெச்சம்

434ஒழியிசை எச்சம் ஒழியிசை முடிபின.
 

மன்னை யொழியிசையும், தில்லை யொழியிசையும், ஓகார வொழியிசையும் ஆகிய ஒழியிசை யெச்ச மூன்றும் ஒழியிசையான் முடியும்; எ - று.

எ - டு : `கூரியதோர் வாண்மன்' `வருகதில் லம்மவெஞ்சேரி சேர' (அகம் - 276) கொளலோ கொண்டான் என்னும் ஒழியிசையெச்சம், முறையானே, திட்ப மின்று. வந்தா லின்னது செய்வல், கொண்டுய்யப் போமா றறிந்திலன் என்னும் ஒழியிசையான் முடிந்தவாறு. பிறவும் முடித்தற்கேற்கும் ஒழியிசை யறிந்துகொள்க.

(38)