9.எச்சவியல்

எச்சச் சொற்களின் வகை

`என' என்னும் எச்சம்

438எனவென் எச்சம் வினையொடு முடிமே.
 

எனவென்னுமெச்சம் வினைகொண்டு முடியும்; எ - று.

எ - டு : கொள்ளெனக் கொடுத்தான்; துண்ணெணத் துடித்தது; ஒல்லென வொலித்தது; காரெனக் கறுத்தது எனவும்; நன்றென்று கொண்டான்; தீதென்றிகழ்ந்தான் எனவும் வரும்.

(42)