சொல்லப்பட்டனவொழிந்து நின்ற சொல்லுங்குறிப்பும் இசையுமாகிய எச்சமூன்றும் மேல் வந்து தம்மை முடிக்கும் எஞ்சுபொருட்கிளவியை யுடைய வல்லவென்று சொல்லுவர் ஆசிரியர்; எ - று. என்றது, அவ்வத்தொடர்க்குத் தாமெச்சமாய் வந்து அவற்றதவாய் நிலையை நீக்கலின் பிரிநிலையெச்ச முதலா யினபோலத் தம்மை முடிக்கும் பிறசொல்லைத் தாம் அவாய் நில்லாவென்றவாறு. அவை பிறசொல் லவாவாது தாம் எச்சமாய் வருமாறு முன்னர்ச் சூத்திரத்தாற் பெறப்படும். (43) |