அவையல் கிளவியை மறைத்துச் சொல்லுங்கால். மேற்றொட்டு வழங்கப்பட்டு வருவன மறைக்கப்படா; எ - று. எ - டு : ஆப்பி , ஆனையிலண்டம் என மரீஇ வந்தன மறைக்கப்படாது வந்தவாறு. `பகல்கான் றெழுதரும் பல்கதிர்ப் பரிதி' (பெரும்பாண் - 2) என்புழிக் கான்றென்பது , தன் பொருண்மே னில்லாது அணி குறித்துப் பிறிதொரு பொருண்மே னிற்றலின் மரீஇய சொல்லாய் மறைக்கப் படாமையின் , அதன் பொருண்மே னின்றவழி மறைக்கப்படுதலுமறிக. (47) |