9.எச்சவியல்

சில மரபு வகை

`ஈ' என்னுஞ் சொல்

445அவற்றுள்
ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே.
 

ஈயென்கிளவி இரக்கப்படுவோனின் இழிந்த இரவலன் கூற்றாம் . தாவென்கிளவி அவனோடொப்போன் கூற்றாம் . கொடு வென்கிளவி அவனி னுயர்ந்தவன் கூற்றாம்; எ - று.

எ - டு : சோறீ ; ஆடை தா ; சாந்துகொடு என மூன்று சொல்லும் முறையானே மூவர்க்கு முரியவாய் வந்தவாறு கண்டுகொள்க.

(49)