குறைத்தனவாயினும் அவை குறையாது நிறைந்து நின்ற பெயரியல்புடைய: எ - று. என்றது, முற்கூறிய உதாரணங்கள் தாமரை ஓந்தி நீல மென நிறைந்த பெயர்களின் பொருள்களைத் தந்தே நிற்குமென்றவாறாம். குறைந்த வழியும் நிறைந்த பெயராகக் கொள்கவென்ற வாறாம். குறைக்கப்படுவன பெயரேயாகலின், `நிறைப்பெயரியல' வென்றார். (58) |