உரிச்சொல் லிடத்தும் வேறுபடுக்குஞ் சொல்லாதற்கும் உரியன உரியவாம் ; எல்லாம் உரியவாகா என்றவாறு . எனவே, உரிச் சொல்லுள் வேறுபடுத்தும் வேறுபடுக்கப்பட்டும் இருநிலைமையு முடையவாய் வருவனவே பெரும்பான்மை யென்பதாம். வேறுபடுக்குஞ் சொல்லேயாவன உறு, தவ, நனி என்னுந் தொடக்கத்தன . இருநிலைமையு முடையன குரு, கெழு, செல்லல், இன்னல் என்னுந் தொடக்கத்தன. உறு பொருள், தவப்பல், நனி சேய்த்து . ஏகல்லடுக்கம் என இவை ஒன்றை விசேடித்தல்லது வாராமையும், குருமணி, விளங்குகுரு ; கேழ் கிளரகலம், செங்கேழ் ; செல்லனோய், அருஞ்செல்லல் ; இன்னற்குறிப்பு, பேரின்னல் என இவை ஒன்றனை விசேடித்தும் விசேடிக்கப்பட்டும் இரு நிலைமையுமுடையவாய் வருமாறும் வழக்குஞ் செய்யுளு நோக்கிக் கண்டு கொள்க. குரு விளங்கிற்று, செல்லறீர எனத் தாமே நின்று வினைகொள்வன . விசேடிக்கப்படுந் தன்மை யுடையவாதலின். விசேடிக்கப்படுஞ் சொல்லாம். பிறவும் விசேடித்தல்லது வாராதனவும் , விசேடித்தும் விசேடியாதும் வருவனவும் வழக்குஞ் செய்யுளு நோக்கி யுணர்க. வேறுபடுக்குஞ் சொல்லேயாவன இவையெனத் தொகுத்துணர்த்தற்கும் உரிச்சொன் மருங்கினு முரியவை யுரிய எனச் சூத்திரஞ் சுருங்குதற்கும். இடையியலுள்ளும் உரியியலுள்ளும் வையாது. இரண்டு சூத்திரத்தையும் ஈண்டு வைத்தார். (60) |