ஈறு திரியாது நின்றாங்கு நின்று உயர்திணையாயிசைத்தல் ஈண்டு இயல்பின்று ; எ-று. ஈண்டென்றது காலமுதலாகிய சொற்களை. அவை இடையீடின்றி மேற்சொல்லப்பட்டு நிற்றலின் `இவண்' என்றார். இவணியல்பின்று எனவே, குடிமை ஆண்மை முதலாயின சொல்லின்கண் குடிமைநல்லன், வேந்து செங்கோலன் என நின்றாங்கு நின்று உயர்திணையாயிசைத்தல் இயல்புடைத் தென்பதாம். (58) |