1.கிளவியாக்கம்

2.பால்

பெண்பால் ஈறு

6ளஃகான் ஒற்றே மகடூஉ அறிசொல்.
 

ளஃகானாகிய ஒற்று மகடூஉ அறிசொல்லாம் ; எ-று.

எ - டு: உண்டனள்,உண்டாள், உண்ணாநின்றனள், உண்ணாநின்றாள், உண்பள், உண்பாள், கரியள், கரியாள் எனவரும்.

(6)

குறிப்பு: - மேற்கண்ட நூற்பாவையும் அதன் உரையையும் உலகியலையும் நோக்குமிடத்து, பால்திரிந்த மக்களும் அவர்களைக் குறிக்குஞ் சொற்களும் பின்வருமாறாம் ; ஆண்மை திரிந்து பெண்மை கொண்டவன் பேடி : பெண்மை திரிந்து ஆண்மை கொண்டவன் பேடன் : இவ்விருவர்க்கும் பொதுப்பெயர் பேடு : இம் மூவர்க்கும் பலர்பாற் பெயர் , முறையே , பேடியர் பேடர் பேடுகள் என்பன . புணர்ச்சி யுணர்ச்சி யில்லாததும் பால் காட்டும் உறுப்பால் ஆணும் பெண்ணுமல்லாததும் அலி. பேடி என்னும் பெயர் பேடிமார் பேடிகள் எனவும் பலர்பால் ஏற்கும்.