1.கிளவியாக்கம்

2.பால்

ஒன்றன்பால் ஈறு

8ஒன்றறி கிளவி , தறட ஊர்ந்த
குன்றிய லுகரத் திறுதி யாகும்.
 

ஒன்றறி சொல்லாவது த ற ட என்னும் ஒற்றை ஊர்ந்த குற்றியலுகரத்தை இறுதியாகவுடைய சொல்லாம்; எ-று.

எ - டு: வந்தது, வாரா நின்றது, வருவது, கரிது எனவும்; கூயிற்று, தாயிற்று கோடின்று, குளம்பின்று எனவும்; குண்டுகட்டு, கொடுந்தாட்டு, குறுந்தாட்டு எனவும் வரும்;

கிடக்கை முறையாற் கூறாது `த ற ட' எனச் சிறப்பு முறையாற் கூறினார்.

குன்றியலுகரம் என மெலிந்து நின்றது . தகர உகரம் மூன்று காலமும் வினைக் குறிப்பும் பற்றி வருதலும் ,றகர உகரம் இறந்த காலமும் வினைக்குறிப்பும் பற்றி வருதலும், டகர உகரம் வினைக்குறிப்பே பற்றி வருதலுமாகிய வேறுபாடுடைமையால் , குற்றியலுகரமென ஒன்றாகாது மூன்றாயின.

(8)