குவ்வென்னு முருபு தொகவருங் கொடையெதிர் கிளவியாகி தொகையினது கொடையெதிர்தலாகிய அப் பொருண்மை ஆறாம் வேற்றுமைக்குரித்துமாம்; எ-று. நாகர்பலி என்பது நாகர்க்கு நேர்ந்த பலியென விரிதலேயன்றி நாகரது பலியென விரியினுமமையு மென்றவாறு கொடையெதிர் கிளவி யென்பதற்குத் தருசொல் வருசொற் குரைத்ததுரைக்க. கொடையெதிர்தல் கொடையை விரும்பி மேற்கோடல். நாகர்க்குக் கொடுத்தலை விரும்பி மேற்கொண்டவழித்திரிபின்றி அவர்க்கஃதுடைமையாதலின், கிழமைப் பொருட்குரிய உருபாற் கூறியனுமமையு மென்றவாறு. (16) |