என்- எனின், மேற்சொல்லப்பட்ட பன்னிரு வகையினும் கைக்கிளைப் பாற்படுவன வகுத்துணர்த்துதல் நுதலிற்று. எண்வகை மணத்தினுள்ளும் முன்னையவாகிய அசுரம் முதல் மூன்றும் 1கைக்கிளைப்பாற்படும் என்றவாறு. (14)
1. வில் ஏற்றியாயினும் கொல்லேறு தழீஇயாயினும் கொள்வல் என்னும் உள்ளத்தனாவான் தலைவனே யாதலின், அதனை முற்படப் பிறந்த அன்பு முறை பற்றி ஒரு தலைக்காமம் ஆகிய " கைக்கிளை " என்றார் . இராக்கதம் வலிதில் மணஞ் செய்தலாதலின் அதுவும் அப்பாற்படும் ; பேயும் அப்பாற்படும் . இவை முன்னைய மூன்றும் கைக்கிளை யாயவாறு . " காமஞ் சாலா இளமை யோள்வயிற் " ( தொல் . பொரு- 50 ) கைக்கிளை சிறப்புடைத் தென்றற்குப் புல்லித் தோன்றும் எனக்கூறி , இதனை வாளாது ` குறிப்பு ' என்றார் . ஆண்டுப் பிற்காலத்தன்றிக் காட்சிக் கண்மணம் அதற்கின்மையில் ஈண்டு மணம் கூறும் வழிக் கூறாது அகத்திணையியலுட் கூறினார் . ( தொல். கள . நச்சி)
|