களவியல்

115கிழவோன் அறியா அறிவினள் இருளென
மையறு சிறப்பின் உயர்ந்தோர் பாங்கின்
ஐயக் கிளவியின் அறிதலும்1 உரித்தே.

இது நற்றாயும் செவிலியும் துணியுமாறு கூறுகின்றது.

கிழவோன் அறியா அறிவினள் என்பது - தலைமகன் அறியா அறிவினையுடைவள் என்றவாறு. எனவே ஒரு பக்கம் எதிர்காலம் நோக்கிக் கூறினார்2 போலத் தோன்றும்; ஒரு பக்கம் இறந்தகாலம் தோன்றும். அவன் அறியாத அறிவுரிமை பூண்டு மயங்குதல், அவள் எத்துணையும் மயக்கமிலள் எனவும் அவன் பொருட்டு மயங்கினாள்3 எனவும்படக் கூறுதல், தலைவன் அறியாத அறிவினையுடையவள் எனக் குற்றமற்ற சிறப்பினையுடைய உயர்ந்தோர்மாட்டு உளதாகிய ஐயக்கிளவியால் புணர்ப்பறிதலும் உரித்து, செவிலிக்கும் நற்றாய்க்கும் என்றவாறு.

இஃது ஏற்றினான் ஆயிற்று எனக் குற்றமற்ற தவரை4 வினாய வழி அவர் இவ்வாறு பட்டதென மெய்கூறுதலுந் தகுதியன்றாம்; பொய் கூறுதலும் தகுதியன்றாம். ஆதலால் ஐயப்படுமாறு சில கூறியவழி அதனானே யுணர்ப என்றவாறு. கிழவோனறியா வறிவினளென்றவாறு கூறியவழிக் கிழவோனெதிர்ப்பட5 ...இறந்த காலத்துள் தலைவன் உளன் என்றவாறாம்.

(27)

1. கிளவி அறிதலும்.

2. கூறினான்.

3. அவன் எத்துணையும் மயக்கமில னென்பது மவள் பொருட்டு மயங்கினான்.

4. தவஙரை.

5. கிழவோனெதிர்ப்பட என்றிருத்தலமையும்.