களவியல்

118அவன்வரம் பிறத்த லறந்தனக் கின்மையின்
களஞ்சுட்டுக் கிளவி கிழவிய தாகுந்
தான்செலற் குரியவழி யாக லான.

இது, சொல்லப்பட்ட கூட்டத்திற்குக் குறியிடம் கூறுவா னுணர்த்துதல் நுதலிற்று.

தலைவன் இயற்கைப்புணர்ச்சி புணர்ந்த பின்பு, தலைவனெல்லையை மறத்தல் தலைவிக்கு அறமாக லின்மையானே குறியிடம் கூறுதல் தலைமகள்தாம்; அது தான் சேறற் குரிய இடமாதலான் என்றவாறு.

எனவே, இத்துணைக்கூறின் மிகையன்று என்றவாறாம்.

(30)