இது தலைவிக்கு உரியதோ ரியல்பு உணர்த்துதல் நுதலிற்று. பன்னூறு வகையினும் என்பது - பலவகையானும் என்றவாறு. நூறு, பத்து, ஆயிரம் என்பன பல் பொருட்பெயர். தன்வயின்வரூஉ...மாதலான என்பது - தன்னிடத்து வரும் நல்ல நயப்பாட்டு பக்கத்தினை ஆராய்தல் தலைவன் மாட்டு வேண்டுமாதலால், துணையைச் சுட்டிக் கூறலுறும் சொல் தலை மகளதாகும்; தான் கூறும் கருமம் துணையோராற் செய்யப்படும் கருமமாதலான் என்றவாறு. எனவே, தலைமகன்2 களவுகாலத்துப் பாங்கற்கு உற்றதுரைத்த பின்பு பாங்கனைச் சுட்டி யாது செய்வாமெனக் கூறப் பெறும் என்றவாறாயிற்று. (33)
1. மாகலான. 2. தலைமகள்.
|