இது, செவிலிக்கு உரியதொரு சிறப்பு உணர்த்துதல் நுதலிற்று. நல்ல பெரிய சிறப்பினையுடைய அறிதற்கரிய மறைப் பொருள் யாவற்றையுங் கூறும் கடப்பாடுடையளாதலின் தாய் எனப்படுவாள் செவிலியாகும் என்றவாறு. நற்றாய் இத்துணைச் சிறப்பிலள் என்றவாறு. இதனாற் பயன் களவுக் காலத்தையச் சொ...செவிலித்தாய்க்குங் கைத்தாய்க்கும் பொதுவாயினும் தாயென்று வேண்டப்படுவாள் செவிலி என்றறிவித்தல். (34)
1. படுவோள்.
|