களவியல்

124சூழ்தலும் உசாத்துணை நிலைமையிற் பொலிமே.

இது, தோழிக்கு உரியதோர் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று .

மேற்சொல்லப்பட்ட தோழி தான் சூழ்தற்கும் தலைவி சூழ்ச்சிக்கு உசாத்துணையாகியும் வரும் நிலைமையாற் பொலிவு பெறும் என்றவாறு .

எனவே, செவிலிமகள் என்னுந் துணையாற் பொலிவு பெறாள் ; என்றும் தோழியாவாள் செவிலி மகளாதலேயன்றிச் சூழவும் உசாத்துணையாவும் வல்லள் ஆதல்வேண்டும் என்றவாறு.

செய்யுள் மேற்காட்டப்பட்டன.

(36)