இதுவும் அது, தோழி வழிமொழிந்து முயலுங்காலத்து அவன் நினைவின்கட் படுந்திறன் ஆராய்ந்து புணர்த்தலைச் செய்யும் அவளிடத்து என்றவாறு . அஃதாவது , ` இன்னுழிச் செல் ' எனவும் ` இன்னுழி வா ' எனவும் , தலைவியை ஆயத்துணின்றும் பிரித்துத் தனி நிறுத்திப் பட்டாங்கு கூறியும் பிறவாற்றானும் ஆராய்ந்து கூட்டுதல். இவ்வைந்து சூத்திரத்தானுந் தோழிக்கு உரிய மரபு உணர்த்தியவாறு காண்க. (39)
|