என்றது , மேல் ` களஞ்சுட்டுக் கிளவி கிழவியதாகும் ' என்றார் . அதற்கு இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று . குறி என்று சொல்லப்படுவது இரவினானும் பகலினானும் இருவரும் அறியச் சொல்லப்பட்ட இடத்தை யுடைத்து என்றவாறு . எனவே , இரவிற்குறி பகற்குறி என இருவகைப்படும் என்பது கொள்ளப்படும். (40)
1. இரவு களவிற்குச் சிறத்தலின் முற்கூறினார் . ( தொல் . 6- 31. நச்சி) (பாடம்) 2. அறியத் தோன்றும்.
|