என்றது , இரவுக் குறிக்கு இடமுணர்த்துதல் நுதலிற்று . இரவுக்குறியாம் இடமே இல்லகத்துள் மனையகம் புகாவிடத்துக்கண் மனையோர் கிளவிகேட்கும் அணிமைத் தாம் என்றவாறு . எனவே , மனைக்கும் எயிற்கும் நடுவணதோரிடம் என்று கொள்ளப்படும். (41)
1. மனையோள் . 2. அகமனையிற் புகாக்காலை எனவே இரவுக்குறி அங்ஙனம் சில நாள் நிகழ்ந்த பின்னர் அச்சமின்றி உள்மனையிற் சென்று கூடவும் பெறும் என்பது கூறியதாம் . ( தொல் . 10 -40 . நச்சி)
|