களவியல்

130பகற்புணர் களனே புறனென மொழிப
அவளறி வுணர வருவழி யான .

என்றது , பகற்குறி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று .

பகற்குறியாகிப் புணருமிடம் எயிற்புறன் என்று சொல்லுவர் ; ஆண்டுந் தலைமகள் அறிவிற்றுவரும் இடனாகல் வேண்டும் என்றவாறு.

(42)