களவியல்

131அல்லகுறிப் படுதலும் அவள்வயின் உரித்தே
அவன்குறி1 மயங்கிய அமைவொடு வரினே.

இதுவுமது .

அல்லகுறிப்படுதலுந் தலைமகட்கு உரித்து ; தலைவன் செய்த குறிமயங்கிய2 பொருத்தத்தொடு வரின் என்றவாறு .

உதாரணம் மேற்காட்டப்பட்டது.

மயங்கிய அமைவு ஆவது - அவன் செய்யும் குறியோடமைவுடையன .

(43)

1. வெறித்தல் வெறியாயினாற்போலக் குறித்தல் குறியாயிற்று.

அக்கருவி புள்ளொலிப்படுத்தல் முதலியன . ( தொல். கள். 42. நச்சி)

(பாடம்) 2. தலைவி செய்த குறிமயங்கிப்.