களவியல்

132ஆங்காங் கொழுகும் ஒழுக்கமும் உண்டே
ஓங்கிய சிறப்பின் ஒருசிறை யான.

இதுவுமது .

அவ்வவ்விடத் தொழுகும் ஒழுக்கமுந் தலைவிமாட்டு உண்டு , ஓங்கிய சிறப்பினையுடைய ஒருபக்கத்து என்றவாறு.

ஒரு சிறையென்றது மனத்தானும் மொழியானும் மெய்யானும் கற்புடை மகளிர் ஒழுகும் ஒழுக்கத்தின் மனத்தான் ஒழுகும் ஒழுக்கமும் உண்டு என்றவாறு.

(44)