என்றது , தலைவற்கு உரிய இயல்பு உணர்த்துதல் நுதலிற்று . களவொழுக்கத்து முகுர்த்தமும்2 நாளும் துறந்தொழுகும் ஒழுக்கம் தலைவற்கு இல்லை என்றவாறு. என்றதனான் , ஆண்டு அறத்தின் வழுவினானல்லன் தலைவிமாட்டுத் தலையளி குறைதலான் என்றவாறு. (45)
1. ஒழுக்கமாவது சீலமாதலின் சீலம் காரணத்தால் துறப்பது தீதாகிய இராசியும் நாளும் என்பது பெற்றாம் . நாளாவது அவ்விராசி மண்டிலம் முழுவதும் ( தொல் . கள . 44. நச்சி) (பாடம்) 2. முழுத்தமும்.
|