களவியல்

135தந்தையுந் தன்னையும் முன்னத்தின் உணர்ப .

என்றது, தந்தையும், தன்னையரும் களவு உணருமாறு உணர்த்துதல் நுதலிற்று.

தந்தையரும் தன்னையரும் குறிப்பின் உணர்ப என்றவாறு.

எனவே , கூற்றினான் உரைக்கப் பெறார் என்றவாறாம்.

(47)