களவியல்

138வெளிப்பட வரைதல் படாமை வரைதல் என்று
ஆயிரண் டென்ப வரைதல் ஆறே.

இது, வரையும் பகுதி உணர்த்துதல் நுதலிற்று.

களவு வெளிப்பட்டபின் வரைதலும் களவு வெளிப்படாமை வரைதலும் என அவ்விரண்டென்று சொல்லுவர் வரையும் நெறி என்றவாறு.

இதனால் சொல்லியது இருவாற்றானும் அறன் இழுக்காதென்றவாறு. அஃது இழுக்காதவாறு வருகின்ற சூத்திரத்தான் உணர்க.

(50)