களவியல்

139வெளிப்படை தானே கற்பினோ டொப்பினும்
ஞாங்கர்க் கிளந்த மூன்றுபொரு ளாக
வரையாது 1பிரிதல் கிழவோற் கில்லை.

இது தலைவற்கு உரியதோர் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று .

களவு வெளிப்படுதல் கற்பினோடோப்பினும் மேற்சொல்லப்பட்ட மூன்று பொருளாக வரையாது பிரிதல் கிழவோற்கு இல்லை என்றவாறு .

அவையாவன முற்கூறிய ஓதற்பிரிவும் , பகைவயிற்பிரிவும் ` தூதிற் பிரிவும் . எனவே பொருள்வயிற் பிரிதலும் வேந்தர்க் குற்றுழிப் பிரிதலும் காவற்பிரிதலும் நிகழ்ப்பெறும் என்ற வாறாம்.

(51)

1. ஓதுதற்கு ஏவுவார் இருமுதுகுரவராதலின், அவர் வரையாமற் பிரிக என்றார். பகைவென்று திறைகோடற்குப் பிரியுங்கால் அன்புறு கிழத்தி துன்புற்றிருப்ப வரையாது பிரிதலின்று. இது தூதிற்கும் ஒக்கும். மறைவெளிப்படுதல் கற்பென்று செய்யுளியலுட் கூறுதலின், இதனை இவ்வோத்தின் இறுதிக்கண் வைத்தார்.

(தொல்.கள-50.நச்சி.)

மூன்றாவது களவியல் முற்றிற்று