கற்பியல்

142மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணங்
கீழோர்க் காகிய காலமும் உண்டே.

இதுவுமது.

மேற் குலத்தாராகிய அந்தணர் அரசர் வணிகர் என்னும் மூன்று வருணத்தார்க்கும் புணர்த்த கரணம் கீழோராகிய வேளாண் மாந்தர்க்கும் ஆகிய காலமும் உண்டு என்றவாறு.

இதனாற் சொல்லியது , முற்காலத்துக் கரணம் பொதுப்பட நிகழ்தலின் எல்லாரக்கும் ஆம் என்பதும் 1பிற்காலத்து வேளாண் மாந்தர்க்குத் தவிர்ந்ததெனவுங் கூறியவாறு போலும். அஃதாமாறு தருமசாத்திரம் வல்லாரைக் கொண்டுணர்க.

(3)

1. முற்காலத்து நான்கு வருணத்தார்க்கும் கரணம் ஒன்றாய் நிகழ்ந்தது என்பதாம். அஃது இரண்டாம் ஊழி தொடங்கி வேளாளர்க்குத் தவிர்ந்தது என்பதூஉம், தலைச்சங்கத்தாரும் முதனூலாசிரியர் கூறிய முறையே கரணம் ஒன்றாகச் செய்யுள் செய்தார் என்பதூஉம் கூறியவாறாயிற்று. உதாரணம் இக்காலத்து இன்று.

(தொல். பொருள். 144. நச்சி.)