என்றது, கரணமாகியவாறு உணர்த்துதல் நுதலிற்று. பொய்கூறலும் வழூஉப்பட வொழுகலும் தோன்றிய பின்னர் முனைவர் கரணத்தைக் கட்டினார் என்று சொல்வர் என்றவாறு. இரண்டுந் தோன்றுவது இரண்டாம் ஊழியின்கண்ணாதலின் முதலூழியிற் கரணமின்றியே! இல்வாழ்க்கை நடந்ததென்பதூஉம் இவை தோன்றிய பின்னர்க் கரணந் தோன்றின தென்பதூஉம் கூறியவாறாயிற்று. பொய்யாவது செய்ததனைமறைத்தல். வழுவாவது செய்ததன்கண் முடிய நில்லாது தப்பி யொழுகுதல்.3கரணத்தோடு முடிந்த காலையின் அவை யிரண்டும் நிகழாவா மாதலாற் கரணம் வேண்டுவதாயிற்று. (4)
1. இவ்வாசிரியர் ஆதி ஊழியின் அந்தத்தே இந்நூல் செய்தலின் முதனூல் ஆசிரியர் கூறியவாறே களவு நிகழ்ந்த பின்னர்க் கற்பு நிகழு மாறுங் கூறித் தாம் நூல் செய்கின்ற காலத்துப் பொய்யும் வழுவும் பற்றி இருடிகள் கரணம் யாத்த வாறும் கூறினார். அக் களவின் வழி நிகழ்ந்த கற்பும் கோடற் கென்று உணர்க. (தொல் பொருள். 145. நச்சி.) (பாடம்) 2. கரணமின்றே. 3. லொழுகுதல்.
|