என்-எனின். அறிவர் கூற்று நிகழுமா றுணர்த்திற்று. மேற் செவிலிக்குரித்தாகச் சொல்லப்பட்ட கிளவி அறிவர்க்கும் உரிய என்றவாறு. உதாரணம் மேற்காட்டப்பட்டன. (13)
1. அறியாத தலைவியிடத்துச் சென்று அறிந்தார் முன்னுள்ளோர் அறம் பொருள் இன்பங்களாற் கூறிய புறப்புறச் செய்யுட்களைக் கூறிக்காட்டுவர் என்பதாம். (தொல். பொருள். 154. நச்சி.)
|