என்-எனின், அறிவர்க்குரியதோர் மரபு உணர்த்திற்று. கழறிய எல்லையின்கண்ணே நிறுத்தலும் அறிவர்க்குரிய ; தலைவனும் தலைவியும் அவர் ஏவல்வழி நிற்றலின் என்றவாறு. உதாரணம் "உடுத்துந் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயுந் தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி விழவொடு வருதி நீயே இஃதோ ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கை பெருநலக் குறுமகள் வந்தென இனிவிழ வாயிற் றென்னும்இவ் வூரே." (குறுந். 295) இது தலைமகற்குக் கூறியது. "துறைமீன்1 வழங்கும் பெருநீர்ப் பொய்கை அரிமலர் ஆம்பல் மேய்ந்த நெறிமருப் பீர்ந்தண் எருமைச் சுவல்படு முதுபோத்துத் தூங்குசேற் றள்ளல் துஞ்சிப் பொழுதுபடப் பைந்நிண வராஅல் குறையப் பெயர்தந்து2 குரூஉக் கொடிப்3 பகன்றை சூடி மூதூர்ப் போர்ச்செறி மள்ளரிற் புகுதரும் ஊரன் தேர்தர வந்த தெரியிழை4 நெகிழ்தோள் ஊர்கோள் கல்லா மகளிர் தரத்தரப் பரத்தைமை தாங்கலோ இலனென5 வறிது நீ புலத்தல் ஒல்லுமோ மனைகெழு மடந்தை அதுபுலந் துறைதல்6 வல்லி யோரே செய்யோ ணீங்கச் சில்பதங் கொழித்துத் தாமட் டுண்டு தமிய ராகித் தேமொழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்ப வைகுநர் ஆத7லறிந்தும் அறியார் அம்மவஃ துடலு மோரே." (அகம். 316) இது தலைவிக் குரைத்தது. (14)
(பாடம்) 1. நீர். 2. பேர்ந்து. 3. பரூஉக்கொடிப். 4. நேரிழை. 5. பரத்தை தாங்கலோ அலனென் பதுநீ. 6. துறுதல். (பாடம்) 7. வைகுநன் ஆகுதல்.
|