என்-எனின், தலைமகன் புலக்குமிடம் கூறுதல் நுதலிற்று. புலவி அண்மைக் காலத்தது; ஊடல் அதனின் மிக்கது. பொருள் சூத்திரத்தான் விளங்கும். உதாரணம்"எவ்வி இழந்த வறுமையர் பாணர் பூவில் வறுந்தலை போலப் புல்லென் றினைமதி வாழிய நெஞ்சே மனைமரத் தெல்லுறு மௌவல் நாறும் பல்லிருங் கூந்த லாரே நினக்கே2." (குறுந். 19) என வரும்.(15)
1. கற்பிற்கும் புலத்தலும் ஊடலும் உரிய ; களவிற்கும் புலத்தலும் ஊடலும் உரிய என்றார். (தொல். பொருள். 156. நச்சி.) 2. யாரளோ நமக்கே.
|