இது தோழிக்குரிய மரபுணர்த்திற்று. "அலந்தாரை யல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்1 புலந்தாரைப் புல்லா விடல்". (குறள். 1303) இது கற்பு. "கலந்த நோய் கைம்மிகக் கண்படா என்வயின்2 புலந்தாயு நீயாயின்3 பொய்யானே வெல்குவை இலங்கு தாழ் அருவியோ டணிகொண்ட நின்மலைச் சிலம்புபோற் கூறுவ கூறும் இலங்கேர் எல்வளை இவளுடை நோயே". (கலித். 46) இது களவு.(16)
1. காமம். 2. எம்வயின். 3. நீயாகிப்.
|