கற்பியல்

156பரத்தை1 மறுத்தல் வேண்டியுங் கிளவி2
மடத்தகு கிழமை உடைமை யானும்
அன்பிலை கொடியை என்றலும் உரியள்.

இதுவும் தோழிக்கு உரியதோர் இயல்பு உணர்த்திற்று.

இது சூத்திரத்தாற் பொருள் விளங்கும்.

உதாரணம்

"மகிழ்செய் தேமொழித் தொய்யில்சூழ் இளமுலை
முகிழ்செய முள்கிய3 தொடர்பவள்4 உண்கண்
அவிழ்பனி உறைப்பவும் நல்காது விடுவாய்
இமிழ்திரைக் கொண்க கொடியை காண்நீ;
இலங்கேர் எல்வளை ஏர்தழை தைஇ
நலஞ்செய்5 நல்கிய தொடர்பவள் சாஅய்ப்
புலந்தழப் புல்லாது விடுவாய்
இலங்குநீர்ச் சேர்ப்ப கொடியை காண்நீ."

(கலித். 125)

என வரும்.
(17)

1. பரத்தமை.

2. கிழத்தி.

3. மூழ்கிய.

4. தொடர்பிவள்.

5. நலஞ்சொல.