கற்பியல்

157அவன்குறிப் பறிதல் வேண்டியுங் கிழவி
அகமலி யூடல் அகற்சிக் கண்ணும்
வேற்றுமைக் கிளவி தோற்றவும் பெறுமே.

இது, தலைவிக் குரியதொரு மரபுணர்த்திற்று.

தலைவன் குறிப்பறிதல் வேண்டியுந் தலைவி தனது அகமலிந்த ஊடல் நீங்கும் இடத்தினும் வேற்றுமைக்கிளவி தோற்றவும் பெறும் என்றவாறு.

"யாரிவன் என்கூந்தல் கொள்வான்"

(கலித்.89)

எனவும்,

"யாரையோ எம்மில் புகுதருவாய்"

(கலித். 98)

எனவும் கூறியவாறு காண்க.

(18)