இது, தலைமகற்குரியதொரு மரபுணர்த்திற்று. இது, சூத்திரத்தாற் பொருள் விளங்கும். உதாரணம் "ஒரூஉ கொடியியல் நல்லார் குரல்நாற்றத் துற்ற" என்னும் மருதக் கலியுள்."பெரியார்க் கடியரோ ஆற்றா தவர்" எனத் தலைவி கூறியவழி, "கடியர் தமக் கியார்சொலத் தக்கார் மற்று" (கலித்.88) என வரும்.(19)
1. காணுங்காலை என்றதனால் தலைவன் தலைவி எதிர்புலப்பது தன் தவறு சிறிதாகிய இடத்து எனவும், இங்ஙனம் பணிவது தன் தவறு பெரிதாகிய இடத்து எனவும் கொள்க. (தொல்.பொருள்.160.நச்சி.)
|