கற்பியல்

159அருண்முந் துறுத்த1 அன்புபொதி கிளவி
பொருள்பட மொழிதல் கிழவோட் குரித்தே2.

இது தலைமகட்குரியதோர் இயல்புணர்த்திற்று.

பொருள்பட மொழிதலாவது பொய்யாக் கூறாது மெய்யே கூறல்.

உதாரணம் வந்தவழிக் காண்க.

(20)


1. பணிந்த மொழி தோற்றாது வேறோர் பொருள்பயப்பக் கூறுதல் தலைவிக்கும் உரித்து. (தொல். பொருள். 161. நச்சி.)

(பாடம்) 2. கிழவோட்கும் உரித்தே.