என்-எனின். அலர் ஆமாறு உணர்த்திற்று. களவினுங் கற்பினும் அலராகு மென்று கூறுதல் வரைவின்று என்றவாறு. `தொகுத்துக் கூறல்' என்பதனாற் களவும் ஈண்டு ஓதப் பட்டது. உதாரணம் "கண்டது மன்னும் ஒருநாள் அவர்மன்னுந் திங்களைப் பாம்புகொண் டற்று". (குறள்.1146) இது களவு."வேதின வெரிநின் ஓதி முதுபோத் தாறுசெல் மாக்கள் புட்கொளப் பொருந்துஞ் சுரனே சென்றனர் காதலர் உரனழிந் தீங்கியான் அழுங்கிய எவ்வம் யாங்கறிந் தன்றிவ் வழுங்க லூரே." (குறுந்.140) இது கற்பு.(21)
|