இதுவும் அது. கிழவோன் விளையாட்டும் காமத்தின் மிகுதியைக் காட்டும் என்றவாறு. ஆங்கு-அசை. "அகலநீ துறத்தலின் அழுதோவா உண்கணெம் புதல்வனை மெய்தீண்டப் பொருந்துதல் இயைபவால் நினக்கொத்த நல்லாரை நெடுநகர்த் தந்துநின் தமர்பாடுந் துணங்கையுள் அரவம்வந் தெடுப்புமே". (கலித்.70) என வரும். விளையாட்டாற் காமமிக்கு உறங்காமை கண்டுகொள்க. (23)
|