கற்பியல்

164மனைவி முன்னர்க் கையறு கிளவி1
மனைவிக் குறுதி உள்வழி உண்டே.

என் எனின் இதுவுமது.

மனைவி முன்னர்ச் செயலற்றுக் கூறுஞ் சொல் மனைவிக்கு உறுதியுள் வழி வாயில்கட்கு உண்டு என்றவாறு.

உதாரணம்

"இனியவர் வரினும் நோய்மருந் தல்லாய் வாரா
தவணர் ஆகுக காதலர் இவண்நம்
காமம் படர்பட வருத்திய
நோய்மலி வருத்தங் காணன்மா ரவரே."


என வரும்.
(25)

1. தலைவன் காமக்கடப்பினால் பணியுந் துணையன்றி நம்மைக் கையிகந்தான் எனக் கையற்றுக் கூறுங் கூற்று. (தொல்.பொருள்.166.நச்சி.)