கற்பியல்

165முன்னிலைப் புறமொழி எல்லா வாயிற்கும்
பின்னிலைத் தோன்றும் என்மனார் புலவர்.

இதுவுமது.

முன்னிலைப் புறமொழியாகக் கூறுஞ் சொல் எல்லா வாயில்கட்கும் உரிய; பின்னிலை முயலுங்கால் தோன்றும் என்றவாறு.

முன்னிலைப் புறமொழியாவது முன்னிலையாக நிற்பாரைக் குறித்துப் பிறனைக் கூறுமாறுபோலக் கூறுதல்.

"உண்கடன் வழிமொழிந் திரக்குங்கால் முகனுந்தாங்
கொண்டது கொடுக்குங்கால் முகனும்வே றாகுதல்
பண்டுமிவ் வுலகத் தியற்கை".

(கலித். 22)

என்றவழி அவ்வுரை தலைமகனை நோக்கியவாறு காண்க.

(26)