இது, மேற்கூறப்பட்ட கூத்தர்க்குஞ் சொல்லாத பாணர்க்கும் உரிய கிளவி உணர்த்திற்று. நிலம் பெயர்ந்துரைத்தல் என்பது - தலைவன் பிரிந்தவிடத்துச் சென்று கூறுதல். அவள் நிலை யுரைத்தல் என்பது - அவள் நின்ற நிலையைத் தலைவற்குக் கூறுதல். "அருந்தவ மாற்றியா னுகர்ச்சிபோல்" என்னும் பாலைக் கலியுள். "தணியா நோய் உகந்தானாத் தகையவள் தகைபெற அணிகிளர் நெடுந்திண்தேர் அயர்மதி பணிபுநின் காமர் கழலடி சேரா2 நாமஞ்சால் தெவ்வரின் நடுங்கினள்3 பெரிதே" (கலித்.30) எனப் பாசறைக்கண் தலைவற்குத் தலைவி வருத்தங் கூறியவாறு காண்க.(28)
(பாடம்) 1. துறைதல் வரைநிலை. 2. சேர்க். 3. நடுங்குநள்.
|