கற்பியல்

174புறத்தோ ராங்கண் புணர்வ தாகும்1.

இது, மேலதற்குப் புறனடை.

மேற் சொல்லப்பட்ட பாசறைக்கட் புறப்பெண்டிர் புணர்ச்சி பொருந்துவது என்றவாறு.

பொருந்துவது என்றதனாற் கூட்டமென்று கொள்க. அவராவார் தாதியருங் கணிகையரும்.


1. புரைவ தென்ப.

'புரை தென்ப' என்ற பாடங்கொண்டு. அவரைப் பெண்ணொடு புணர்த்துப் புலனெறி வழக்கம் செய்தல் பொருந்துவது என்று கூறுவர் ஆசிரியர். (தொல்.பொருள்.176.நச்சி.)

(35)